சர்க்கரை நோயாளிகளுக்கு சிறு நீரகங்கள் பலவிதங்களில் பாதிக்கப்படலாம். அவற்றுள் சிருநீரக அழற்சி. பைலோ நெப்ரைட்டிஸ், நிரந்தர சிறுநீரக
செயலிழப்பு போன்றவை முக்கியமானவை. நிரந்தரமாக கிட்னி பெயிலியர் ஆவதில் 40 சதவீதம் சர்க்கரை நோயால் தான் ஏற்படுகிறது.
இதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?
சர்க்கரை நோயை ((HbA1C 7க்குல்) கட்டுப்படுத்துதல், இரத்த அழுத்தம் இருப்பின் (130/80 க்குள்) கட்டுப்படுத்துதல், தானே மேற்சொன்ன நோய்களுக்கு சிகிச்சை செய்யாமல் தவிர்த்தல், வலி நிவாரணிகள் உட்கொள்வதை அறவே தவிர்ப்பது, சரியான உணவுமுறை மற்றும் பயிற்சி (தினசரி 40 நிமிட நடை பயிற்சி) செய்வது, போன்றவற்றால் சிறுநீரக நோய் ஏற்படுவதை தள்ளிப்போடவும், தவிர்க்கவும் முடியும்.
இதில் சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக செய்து கொள்ள வேண்டியது வருடத்திற்கு 1 முறையாவது தங்களது சிறு நீரகங்களை பரிசோதித்துக்க்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தங்கள் நோய் கண்டறிந்த முதல்முறையே சிறுநீரக சோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
சிறுநீர் பரிசோதனை என்பது புரதக்கசிவு மற்றும் இரத்தத்தில் கிரியாட்டினின் அளவை கண்டறிவதாகும் சிறுநீரக நோய் இல்லை என்றால் இந்த ஆய்வுகளை ஆண்டுக்கொருமுறை செய்ய வேண்டும் முக்கியமாக சர்க்கரை நோய் இல்லை என்றால் இந்த ஆய்வுகளை ஆண்டுக்கொருமுறை செய்ய வேண்டும். முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டாலோ, கை, கால்கள் வீங்கினாலோ, கண்ணில் லேசர் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தாலோ சர்க்கரை நோயாளிகளின் சிறுநீரகங்கள் பரிசோதிக்கப்படவேண்டியது கட்டாயமாகிறது.
"நோய் நாடி நோய் முதல் நாடி" என்பது போல் அதை கண்டறிந்து நோய் இருப்பின் அதற்கான சிறப்பு சிகிச்சைகளை தொர்ந்து மேற்கொள்வதன் மூலம் பற்பல ஆண்டுகள் இந்த இனிப்பு நோயுடன் இனிதே வாழலாம்.
DR. M.சிவக்குமார்
Ph : 9443393611
மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையம்
6/6 B-2, சிவகங்கை ரோடு, மதுரை - 625 020.
மின்னஞ்சல் : nephsiva@gmail.com, maduraikidneycentre@gmail.com
|