A very basic Superfish menu example
A TO Z IN KIDNEY CENTRE
OUR SERVICES
HOME
ABOUT US
TRANSPLANTATION
UROLOGY SURGERIES
OP SERVICE
IP SERVICE
LABORATORY
VIDEO
PROTECT YOUR KIDNEYS
KIDNEY DISEASE
சிறுநீரக நோய்களும், இருதய பாதிப்பும்
சிறுநீரக சோர்வு - 'ஒரு மவுன நோய்'
PREVIOUS NEWS

LATEST NEWS

LIFE TIME ACHIEVEMENT
மருத்துவத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையத்தின் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பேராசிரியர்
READ MORE..
சிறுநீரக நோய்களும், இருதய பாதிப்பும்

Dr.T. தினகரன், M.D.,M.N.A.M.S.,D.M., (Neph)
இயக்குநர் & சிறுநீரகவியல் மருத்துவர்
மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையம்
6/6 B-2, சிவகங்கை ரோடு,
மதுரை - 625020.
போன் : 0452-2584397, 2584566, 4392267 பேக்ஸ் : 0452-4393367
மின்னஞ்சல் : doctdhina@gmail.com, maduraikidneycentre@gmail.com

உங்களுக்கு தலைவலி, தொண்டை வலி, ஃபுளு காய்ச்சல் போன்ற நோய்கள் வந்தால் வெளியே தெரியும். ஆனால் சிறுநீரக சோர்வு (Chronic Kidney Disease) அல்லது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் பொழுது ஆரம்பகாலத்தில் தெரிவதில்லை. இந்நோய் நமக்கு பெரும்பாலும் முற்றிய நிலையிலேயே தெரிய வரும்.

சிறுநீரக பாதிப்பு யாருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது?

  • சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு
  • அதிகமான இரத்த கொதிப்பு (High blood pressure) அல்லது இருதய நோய்(Heart disease) உள்ளவர்களுக்கு
  • குடும்பத்தில் பரம்பரையாக யாருக்கேனும் சிறுநீரக சோர்வு (Chronic Kidney Disease) இருந்தால்
  • 60 வயது அல்லது அதை தாண்டியவராக இருந்தால்

நாட்பட்ட சிறுநீரக சோர்வு (Chronic Kidney Disease) ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் :-

  • ஒருவருக்கு சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் இரத்தக் கொதிப்பு (High blood pressure) அதிகமாக இருப்பது

சர்க்கரை நோய் இருந்தால் சிறுநீரகத்தின் வடிகட்டிகளில் அழுத்தம் அதிகரிக்கும். நாள்பட இந்த அழுத்தம் சிறுநீரக வடிகட்டியை பாதித்து சிறுநீரில் புரதசத்து வெளியேறுவதற்கும் காரணமாகிறது.

இதற்கு தகுந்த நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்காமல் போனால் சிறுநீரக சோர்வு(Chronic Kidney Disease), மாரடைப்பு(Heart disease), பக்கவாதம் (Strokes), போன்ற நோய்களும் ஏற்படலாம்.

சிறுநீரக சோர்வுக்கான அறிகுறிகள் எவை?

  • மந்தம் சோர்வு
  • பசியின்மை
  • தூக்கமின்மை
  • தோலில் வறட்சி மற்றும் அரிப்பு
  • இரவு நேரங்களில் நரம்பு இழுத்தல்
  • பாதத்திலும் அதை சுற்றியும் வீக்கம்
  • காலையில் எழுந்தவுடன் கண்களை சுற்றி ஏற்படும் வீக்கம்

எளிமையான பரிசோதனைகள் மூலம் சிறுநீரக நோயை எவ்வாறு இனம் கண்டு கொள்ளலாம்?

இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு...

இரத்த கொதிப்பானது சிறுநீரகத்தின் சிறிய இரத்தநாளங்களை பாதிக்கிறது. இது சர்க்கரை நோய்க்கு அடுத்த சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய முக்கியமான ஒன்றாகும். சர்க்கரை நோயும், உயர் இரத்த அழுத்தமும் சேர்ந்து சுமார் 60 சதவீத சிறுநீரகச் சோர்வுக்கு காரணமாகிறது.
சிறுநீரக சோர்வு உள்ள ஒருவருக்கு இரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருந்தால் நல்லது. 130/80க்கு கீழ் இருந்தால் சிறந்தது. 120/80 இருந்தால் மிகவும் சிறந்தது.

சிறுநீரில் புரதத்திற்கான ஆய்வு :-

சிறுநீரில் புரதம், வெண்புரதம் (அல்புமீன்), வெளியேறுதல் சிறுநீரகச் சோர்விற்கான முதல் அறிகுறி. புரதச்சத்தானது தொடர்ந்து வெளியேறினால் சிறுநீரக பாதிப்பை தெரிந்து கொள்ளலாம்.

இரத்தத்தில் கிரியாட்டினின் ஆய்வு :-

நன்றாக இயங்கும் சிறுநீரகமானது இரத்தத்திலிருந்து கிரியாட்டினின் என்ற கழிவுபொருளை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் சோர்வடையும் பொழுது இவ்வாறு வெளியேறும் அளவும் குறைகிறது. அதனால் இரத்தத்தில் உள்ள கிரியாட்டினின் அளவு கூடுகிறது. 0.6 டொ 1.2ம்க்/ட்ல் இரத்தத்தில் இருந்தால் அது சரியானது.

GFR (சிறுநீரக இயக்கத்தை கணிக்கும் சோதனை)

இந்த பரிசோதனை சிறுநீரக ஆய்வுக்கு மிக துல்லியமான ஒன்று. மருத்துவர் நோயாளியின் வயது, இனம், பாலினம், இரத்தத்தில் உள்ள கிரியாட்டினின் அளவு ஆகியவற்றை வைத்து இந்த அளவை மதிப்பிடுவர். இந்த GFற்-ன் அளவை பொறுத்து சிறுநீரகச்சோர்வை 1 முதல் 5 வகையாக அளவிடலாம். இதில் ஸ்டகெ V என்பது முற்றிய செயலிழப்பு நிலை.

சிறுநீரக சோர்வுடையவர்கள் செய்ய கூடியவை :-

  • அதிகமான இரத்த கொதிப்பை குறைக்கவும்.
  • உப்பை மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டும் சேர்க்கவும்.
  • சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில் அவற்றை கட்டுபாட்டிற்குல் வைக்கவும்.
  • வலி மாத்திரைகளை தவிர்க்கவும்.
  • குறைந்த அளவு புரதச்சத்துள்ள ஆகாரங்களை எடுத்து கொள்ளவும்.
  • நாம் அனைவரும் செய்ய வேண்டியவை :-

    • உடற்பயிற்சி
    • புகைபிடித்தல் மற்றும் மதுபானங்களைத் தவிர்த்தல்
    • கொழுப்பு சத்தை கட்டுபாட்டிற்குள் வைத்தல்
    • எடையை சரியான அளவில் வைப்பது
    • வருடாந்திர ஆய்வுகள் மூலம் - ஆரம்பநிலையை அறிவது.
    • உங்கள் முன்னோர்க்கு ஏதேனும் வியாதி இருந்தால் தெரிந்து கொள்வது அவசியம்.

    சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சை முறைகள் :-

    சிறுநீரக செயல்திறன் குறைகின்ற போது நமது உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களான யூரியா, கிரியாடினின் மற்றும் பிற தாதுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து விடுவதால், சிறுநீர் சரிவர பிரியாத நிலை மூச்சுத்திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம¢, கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல்வறண்டு அரிப்பு, இரத்தசோகை ஏற்பட்டு இதயம், மூளை, நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.

    இந்தப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க இரத்தத்தில் கலந்துவிட்ட கழிவுப் பொருட்களை சுத்திகரித்து நீக்க வேண்டும். அப்படிப் பிரித்து நீக்குவதைத் தான் டயாலிசிஸ் என்று சொல்கின்றோம்¢.

    இது வியாதியின் தன்மையினைப் பொருத்து சிலருக்கு சில நாட்கள் அல்லது சிலவாரங்கள் தேவைப்படும். அதுபோன்றே சிலருக்கு வாழ்நாள் முழுமைக்கும் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை வரைக்கும் தேவைப்படும்.

    டயாலிசிஸ் இரண்டு வகைப்படும். அவை ஹீமோ டயாலிசிஸ்,மற்றும் பெரிடோனியல் டயாலிசிஸ்.

    ஹீமோ டயாலிசிஸ்:

    இது உடலுக்கு வெளியே செயற்கை சிறுநீரகமாக ஒரு இயந்திரம் செயல்பட்டு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இந்த சிகிச்சை வாரம் 2 அல்லது 3 முறை தேவைப்படும். சிகிச்சைநேரம் சுமார் 4 மணி நேரமாகும். முழுமையான செயலிழப்பு உள்ள நிலையில் இச்சிகிச்சை வாழநாள் முழுவதுமோ அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்தபடும் வரையிலோ தேவைப்படும்

    பெரிடோனியல் டயாலிசிஸ்;

    இதில் நோயாளியின் வயிற்றில் துளையி¢ட்டு ஒரு குழாயினை செருகி, அந்த குழாய் மூலமாக வயிற்றுக்குள் திரவத்தினை செலுத்தி 4 அல்லது 10 மணி நேரத்திற்குப் பிறகு அத்திரவத்தினை வெளியேற்ற வேண்டும்.

    இப்படியான முறையில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். இப்படி செய்கின்ற போது இரத்தத்தில் அதிகரித்துள்ள யூரியா, கிரியாட்டினின் வெளியேற்றப் படுகின்றது.

    இதை நோயாளியே மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ உதவியாளிரின் பார்வையில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

    இதயம் பலகீனமானார்கள், வயாதானோர்கள், நீரிழிவு நோயினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை ஏற்றதாகும்.

    இதைச் செய்து கொள்கின்றபோது கிருமித்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இதற்கு தொடர் ஆம்புலேட்டரி பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்று பெயர்.

    இந்த இரண்டு முறையில் எது நோயாளிக்கு ஏற்றது என்பது மருத்துவரின் ஆலோசனை மற்றும் நோயாளின் குடும்பச் சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து.

    டயாலிசிஸ் செய்து கொண்டால் பூரண குணமாகிவிடும் என்று நினைப்பது தவறு!

    சிறுநீரகப் பாதிப்பின் தன்மையைப் பொருத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தேவையெனில் அதுவரை டயலிசிஸ் செய்து கொள்ள வேண்டும். அதுபோலவே சிறுநீரக தானம் தரயாரும் முன்வராத நிலையில் ஆயுள் முழுக்க டயாலிசிஸ் செய்து கொள்ளத்தான் வேண்டும்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை:

    யாரிடமிருந்து சிறுநீரகம் பெறலாம் ? :

    நெருங்கிய இரத்த உறவுளள உறவினர்களிடமிருந்தோ அல்லது விபத்தில் அல்லது வேறு காரணங்களால் நினைவிழந்து மூளை இறப்பு ஏற்பட்டுள்ள வரிடமிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.

    தானமாக பெறுபவரின் உடல் தானமாக கொடுப்பவரின் சிறுநீரகத்தினை ஏற்றுக்கொள்ளுமா என்பதை அறிய பல்வேறு நுண்ணியசோதனைகளை நடத்த வேண்டும். மாற்று அறுவை சிகிச்சை சற்றேற்குறைய 3 லிருந்து 4 மணி நேரம் நடைபெறும¢ பெற்றுக் கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் எல்லாம் பொருந்தி மாற்று அறுவைசிக்சை செய்து கொண்டாலும் தொடர்ந்து மருத்துவக்கண்காணிப்பில் இருக்க வேண்டும். 

    சிறுநீரகச் சோர்வு முற்றிய நிலையிலும் சிகிச்சைக்கான வழிமுறைகள் இருந்தாலும் அவை சிலருக்கு மட்டுமே பயன்பட முடியும். எனவே, ஆரம்ப கால பாதிப்பை இனம காண்பதும், அது முற்றிய நிலை அடைவதைத் தடுத்ப்பதும், அம்மாதிரியான சிறுநீரக பாதிப்புகளால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளான இரத்த சோகை இருதய பாதிப்பு, இரத்தக் குழாய் அடைப்பு போன்றவற்றை தடுப்பதுதான எல்லோருக்கும் பயனுடையதாக அமையும். விழிப்புணர்வும், ஆரம்பகால சோதனைகளும் முறையான சிகிச்சையும், தவறுகளைத் தவிர்ப்பதும் இதற்கு முக்கியமான வழிகளாகும்.

    இவைகளின் மூலம் "சிறுநீரகங்களைப் பாதுகாப்போம் இருதய நோயைத் தவிர்ப்போம்"..

     
    developed by Jupiter Web Soft