A very basic Superfish menu example
A TO Z IN KIDNEY CENTRE
OUR SERVICES
HOME
ABOUT US
TRANSPLANTATION
UROLOGY SURGERIES
OP SERVICE
IP SERVICE
LABORATORY
VIDEO
PROTECT YOUR KIDNEYS
KIDNEY DISEASE
சிறுநீரக நோய்களும், இருதய பாதிப்பும்
சிறுநீரக சோர்வு - 'ஒரு மவுன நோய்'
PREVIOUS NEWS

LATEST NEWS

LIFE TIME ACHIEVEMENT
மருத்துவத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையத்தின் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பேராசிரியர்
READ MORE..

" தானத்தில் சிறந்தது உடல் உறுப்பு தானம்"

உடல் உறுப்புகள் கொடை என்பது நோயுற்று, உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடல் உறுப்பை தானமாக அளிப்பதாகும்.

தமிழகம் ழுழுவதும் சமீப நாட்களாக உடல் தானம் செய்யும் போக்கு வளர்ந்து வருகிறது. ஒருவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயலிழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறு நீரகம், போன்ற முக்கியமான சில உடல் உறுப்புகளை அவருடைய நெருங்கிய உறவினர்கள் விரும்பினால் தானம் செய்யலாம். மனிதன் இறந்து போனதும் மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் அவருடைய உடலில் இருக்கும் உறுப்புகள் அகற்றப்பட்டு, அந்த உறுப்புகள் தேவைப்படும் பலருக்குக்ம் பொருத்தப்பட்டு, வேறொரு மனிதரை உயிர்ப்பிழைக்க வைத்து உறுப்புகள் அங்கே இயங்கவைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒருவர் இறந்துவிட்டால் கூட, அவருடைய உறுப்புகள் இன்னொருவர் மூலமாக வாழந்துக்கொண்டுதான் இருக்கின்றன. மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவர் செய்யும் உடல் உறுப்பு தானம் பல பேர்களின் வாழ்வை வளப்படுத்தும்.

உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பது மதக்கோட்பாடுகளை எதிரான செயல் என்ற நிலை தற்போது மாறிவருகிறது. "இருக்கும்வரை இரத்தானம் இறந்தபின் உறுப்புதானம்" என்பதும். 'தானத்தில் சிறந்தது உறுப்புதானம்' என்ற எண்ணமும் மேலோங்கிவருகிறது.

இந்தியாவில் 10லட்சம் பேருக்கு 5பேர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தால் 10 ஆயிரம் சிறு நீரகங்கள் கிடைத்து அவ்வளவு சிறு நீரக நோயாளிகள் மறுவாழ்வு பெறலாம். தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை உடல் உறுப்பு தானம் செய்தவரின் எண்ணிக்கை 100ஜ கடந்துள்ளது. தமிழகத்தில் உறுப்பு தானம் தொடங்கி ஜந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், வேறு எந்த மா நிலத்திலும் தமிழகத்தைப் போல உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

"அமிழ்தம் அவனுடை வழியாகும்; அன்பே அவனுடை மொழியாகும். தருவது மேலென பேசிடுவான்_"

என்ற விதைகளை நம்மில் குழந்தை பருவத்திலே வித்திட்ட மூதாதையர்களும் இப்பொழுது ஏற்பட்ட உறுப்புதானங்களைப் பற்றிய விழிப்புணர்வுமே இதற்கு காரணம். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே "மெய்" ஞானம் சொன்னால் அது மிகையாகாது.

DR. M.சிவக்குமார் M.D.,D.M., (Neph)
Ph : 9443393611
மதுரை சிறுநீரக மையம் மற்றும் மாற்றுறுப்பு ஆராய்ச்சி நிலையம்
6/6 B-2, சிவகங்கை ரோடு, மதுரை - 625 020.
மின்னஞ்சல் : nephsiva@gmail.com, maduraikidneycentre@gmail.com

 
developed by Maduraisoft